நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் தொல்லை - நெல்லை கண்ணன் !

nellai kannan
sinoj kiyan| Last Updated: திங்கள், 13 ஜனவரி 2020 (17:56 IST)
பிரதமர் மோடி மற்றும்  அமைச்சர் அமித் ஷா ஆகிரோருக்கு எதிராக அவதூறு பேசியதாக கைது  செய்யப்பட்ட நெல்லைக் கண்ணனுக்கு சமீபத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இன்று  நெல்லை காவல் நிலையத்தில் கையெழுத்திய வந்த நெல்லை கண்ணன், நெல்லை தமிழில் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் கூட்டமொன்றில் நெல்லை கண்ணன் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து நெல்லை கண்ணன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
 
இந்த மனு மீதான விசாரணை  நடைபெற்ற போது,  கடந்த 3ஆம் தேதி நெல்லை கண்ணனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது . 
 
இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி   நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இதனையடுத்து, இன்று, காவல் நிலையத்தில்  கையெழுத்திட்ட  நெல்லை கண்ணன்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :