புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2017 (09:01 IST)

ஜெயலலிதா உடலை தோண்டி எடுக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் முடிவடையும் நிலையில் தற்போது அவரது உடலை மெரீனாவில் இருந்து தோண்டியெடுத்து டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது மனுவில் ஜெயலலிதா உடலையும் மெரினாவில் இருந்து தோண்டி எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அம்ருதா கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.