விஷால் மீது மீடூ புகார் கூறிய பெண் மீது வழக்குப்பதிவு

Last Updated: வியாழன், 29 நவம்பர் 2018 (18:26 IST)
சென்னை கோபாலபுரத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டிற்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்த விஷால் அதன்பின்னர் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடியதாக விஸ்வதர்ஷினி என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் விஷால் மீது திடுக்கிடும் பாலியல் மீடூ குற்றச்சாட்டு சுமத்திய விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


விஸ்வதர்ஷினி தனது பக்கத்து வீட்டு சிறுமி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :