செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (17:48 IST)

முட்டாள்தனமான செய்தி: விஷ்ணு விஷால் ஆவேசம்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமலாபாலை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக காலை முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
 
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘ என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி. தயவுசெய்து பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறோம். இது தொடர்பாக யாரும் எதுவும் எழுத வேண்டாம்’’ என்று ஒரு வணக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
 
முன்னதாக அமலா பால் உடன் விஷ்ணு விஷால் இணைந்து நடித்த ராட்சசன் சூப்பர் ஹிட்டாகியது . இந்த படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.