வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2019 (15:29 IST)

தமிழகத்தில் வாக்களிக்க சென்ற 4 முதியவர்கள் உயிரிழப்பு

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர். வாக்களிக்க்க வாக்குச்சாவடிக்கு சென்ற 4 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனல் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சிவகிரியில் வாக்களித்து விட்டுவந்த முதியவர் முருகேசன் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பலியானார்.
 
சேலம் மாவட்டம் வேடம்பட்டியில் வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 
இதனையடுத்து வேலூர் வாலாஜாபேட்டை அருகே வாக்களிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருங்கூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற மல்லிகா என்ற மூதாட்டி உயிரிழந்தார்.
 
தற்போது இடைத்தேர்தலில் 42.92 வாக்குகள் பதிவு ஆகியுள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றன.