1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (11:49 IST)

அவமானப்பட்ட அன்புமணி: கல்லெறிந்து துரத்திய மர்ம கும்பல்: தர்மபுரியில் பரபரப்பு!!!

தர்மபுரியில் அன்புமணி பிரச்சார வாகனத்தில் கல் எறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த கட்சியின் தலைவர்கள் தங்களின் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அன்புமணி ராமதாசும், அந்த தொகுதியின் அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் கோவிந்தசாமியும் மெனசியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
 
அப்போது கூட்டத்தில் இருந்த நபர்கள் யாரோ அன்புமணி பிரச்சார வாகனத்தின் மீது கல்லெறிந்தனர். இதனால் பிரச்சாரம் பாதியில் முடிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக, பாமக நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். நடவடிக்கை ஏடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.