செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:17 IST)

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த தம்பதியர் - மக்கள் ஆச்சர்யம்

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த  தம்பதியர் - மக்கள் ஆச்சர்யம்
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல திரையுலக பிரபலங்கள், தலைவர்கள் தொடந்து வாக்களித்த வண்ணமாகவே இருக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள  ஷெனாய் நகரில் திருமணத்தில் தாலி கட்டி திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமாப்பிள்ளை- மணப்பெண் உற்சாகத்துடன் வாக்களிக்க வந்தனர்.
மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த  தம்பதியர் - மக்கள் ஆச்சர்யம்
தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்த புதுமணத் தம்பதிகளை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். 
 
தமிழகத்தில் காலை 11  மணி நிலவரப்படி 30.62% வாக்குகள் பதிவாகியுள்ளண என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.