புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:21 IST)

2019-20 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் - உடனுக்குடன்

2019-20 நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டு வருக்கிறது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
 
இந்நிலையில், பட்ஜெட் குறித்த செய்திகளை வெப்துனியா உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறது.

பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்

வரும் நிதியாண்டில் தமிழகத்தின் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை - ரூ. 44,176 கோடி.
 
வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கணிப்பு.
 
அரசின் செலவினங்கள் ரூ. 2,08,671 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
2019-2020 தமிழக அரசின் வருவாய் ரூ. 1,97,721 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
 
ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூல இயற்கை மரணத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை.

தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை 10, 950 கோடி இருக்கும் என அறிவிப்பு

சமூக பாதிகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு 3950 கோடி நிதி

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு விரிவான ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்க ஊக்க திட்டம் தொடரும்

சிறுபான்மையினர் நலத்துறைக்கு 14.99 கோடி ஒதுக்கீடு

மெட்ரோ ரயில் வண்டலூர் வரை நீடிக்க வாய்ப்பு

வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு 1031 கோடி ஒதுக்கீடு

ராமேஸ்வரத்தில் கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி

சென்னை, கோவை, மதுரையில் 500 மின்சார பேருந்துகள்

பளிக்கல்வித்துறைக்கு 28, 700 கோடி நிதி ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு 911.47 கோடி நிதி ஒதுக்கீடு

சத்துணவுத் திட்டங்களுக்காக 1772 கோடி நிதி ஒதுக்கீடு

நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக 18,700 கோடி நிதி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத்துறைக்கு 13, 605 கோடி ஒதுக்கீடு

விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்.
 
விவசாயிகளுக்கு ரூ, 10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு.
 
வரும் நிதி ஆண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ, 12,563 கோடி ஒதுக்கீடு.
 
ஒட்டுமொத்த உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு 51.8 சதவீதம் ஆக உள்ளது.
 
தனி நபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ. 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.
 
2018-2019 ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வலர்ச்சி விகிதம் 8.16% ஆக உயர்வு.

விவசாயத்துறைக்கு 10,550 கோடி ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்

ஊரக வளர்ச்சித் துறைக்கு 18,273 கோடி நிதி ஒதுக்கீடு

உழவர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை

ஆயுள் காப்ப்பிடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் நிவாரணத் தொகை

விபத்தும் மூலம் ஏற்படும் விபத்திற்கு 4 லட்சம், நிரந்தர ஊனத்திற்கு 3 லட்சம் நிவாரண நிதி

சென்னையில் 2000 கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன் நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

காவல் துறைக்கு 8084 கோடி ஒதுக்கீடு

9975 சீருடை பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி, திருவொற்றியூர் குப்பத்தில் மீன்பிடி துறைமுகங்கள்  அமைக்க அனுமதி

20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்.
 
வரும் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ. 12,563 கோடி ஒதுக்கீடு.
 
செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் இதுவரை ரூ. 3,074,84 கோடி மதிப்பீட்டில் 1,768 கி.மீ சாலைப் பணிகள்.
 
மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும் ரூ.1361 கோடி ஒதுக்கீடு.
 
வரிகள் மூலம் தமிழக அரசுக்கு 1,37,964 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
 
பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.

பம்புசெட்டுகள் 90 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள 284.70 கோடி நிதி ஒதுக்கீடு

2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன

தமிழக அரசின் கடன் 3.97 லட்சம் கோடி

கடந்த ஆண்டு அரசின் கடன் 3.55 லட்சம் கோடியாக இருந்தது

அடுத்த நிதியாண்டில் கடனுக்கான வட்டி மட்டும் 33,278 கோடி செலுத்த திட்டம்

இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டம்தோறும் மையங்கள் அமைக்கப்படும்

பால் வளத்துறைக்கு ரூ. 258.45 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

பழைய ஓய்வூதிய்த் திட்டம் குறித்து அரசு பரிசீலனை 

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க 170.13 கோடி நிதி ஒதுக்கீடு

ஆழ்கடல் மீனவர்களின் தொலைதொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்படும்

80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொலைதொடர்பு கருவிகள் வழங்கப்படும்

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள் ஏரிகளை தூர்வார 300 கோடி நிதி ஒதுக்கீடு

நவீன பாசன வேளாண்மை திட்டத்திற்கு 235 கோடி ஒதுக்கீடு


80 ஆழ்கடல் மீன்பிடி குழக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160   ஐசாட் - 2 தொலைபேசிகள் வழங்கப்படும்.
 
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ. 132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம்.
 
பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ. 12,563 கோடி ஒதுக்கீடு.
 
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.
 
ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ. 5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள்.
 
அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ. 1558.87 கோடி ஒதுக்கீடு.
 
தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ரூ. 1,125 கோடி மதிப்பீட்டில் 250 மெ.வா. திறன் கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்கள்.
 
ரூ. 2,350 கோடி மதிப்பீட்டில் 500 வெ. வா, திறன்கொண்ட கடலாடி மிகௌய்ய சீரிய மின்னழுத்த பூங்கா திட்டம்.
 
சிறப்பு திட்டத்தின் முலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 
சென்னையில் நதிக்கரையோரம் வாழம் 38,000 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 4847.50 கோடி செலவில் வீடு கட்டி தரப்படும்.
 
நிறுவனங்களின் மறுகட்டமைப்பு தொடர்பான சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவுக்கட்டணம் அதிகபட்சமாக ரூ. 3000 என நிர்ணயிக்கப்படும்.

அணைகள் புனரைப்புப் பணிகளுக்கு 43 கோடி ஒதுக்கீடு

சென்னையை சுற்றியுள்ள வனப்பகுதிகளை பாதுகாக்க 25 கோடி நிதி ஒதுக்கீடு

விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 168.27 கோடி நிதி ஒதுக்கீடு

பொது விநியோகத் திட்டத்திற்காக 6000 கோடி நிதி ஒதுக்கீடு

1200 கோடியில் கிராம்ப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்

ஊரக வேலைத்திட்டத்திற்கு தமிழக அரசின் பங்காக 250 கோடி பங்கு ஒதுக்கீடு

பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்

கால்நடை பராமரிப்பு துறைக்கு 1252.41 கோடி நிதி ஒதுக்கீடு


தமிழக திரன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ. 200 கொடி ஒதுக்கீடு.
 
சுற்றுலா தலங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 
சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண் திட்டத்தை ரூ. 1546 கோடி ரூபாயில் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி.
 
தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
பயிர் கடன் வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு. பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ. 621.59 கோடி ஒதுக்கீடு.
 
பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ. 28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ. 4,584.21 கோடி ஒதுக்கீடு.
 
சாகுபடிக்கு பயன்படாத சமுதாய மற்றும் பட்டா நிலங்களில் பதுபிக்கத்தக்க மின்னுற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்.
 
வரும் நிதி ஆண்டில் தமிழக் அரசு ரூ. 51,800 கோடி கடன் வாங்க வரம்பு உள்ள நிலையில் ரூ. 43000 கோடி கடன் வாங்க திட்டம்.
 
வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ. 172 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

அனைத்து துறைகளுக்கும் சேர்த்து 2 லட்சத்து 63 ஆயிரத்து 828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு