வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (09:17 IST)

நாளை தமிழகப் பட்ஜெட் தாக்கல் – என்ன எதிர்பார்க்கலாம் ?

2019-20 நிதியாண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

மே மாதத்தோடு ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் முடிய இருப்பதால் 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதனை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் இந்த பட்ஜெட்டில் தேர்தலை முன்னிட்டு பல சலுகைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதில் முக்கியமானவைகளாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகை அளித்தல், வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ஆண்டுக்கு 5 லட்சமாக உயர்த்துதல் என சில அம்சங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அதையடுத்து நாளை தமிழக அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. இதனை நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழக பட்ஜெட்டிலும் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்தே அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயம், வேலைவாய்ப்பு, சிறுதொழில், ரியல் எஸ்டேட், குடிநீர் பற்றாக்குறைப் போக்கும் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.