திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2017 (23:59 IST)

பாம்பன் பாலத்தில் 100வது விபத்து: கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரத்தையும் இராமநாதபுரத்தையும் இணைக்கும் சாலை வாகனம் செல்லும் பாலத்தின் பெயர் பாம்பன் பாலம். இந்த பாலத்தின் சாலை வழுவழுப்பாக இருப்பதால் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது



 
 
இந்த சாலையில் விபத்துக்கள் நடைபெறாவண்ணம் சாலையை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கேட்டுக்கொண்டபோதும் இராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை
 
இந்த நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து ஒன்று இந்த பாலத்தின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 100வது விபத்து என்று குறிப்பிட்டு கேக் வெட்டி இந்த விபத்தை அப்பகுதிமக்கள் கொண்டாடினர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு ஏற்பட்டது.