நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்: திருநங்கைகளை நிர்வாணப்படுத்திய காவலர்கள்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 13 செப்டம்பர் 2017 (21:50 IST)
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்தின் போது திருநங்கைகளை நிர்வாண படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 
 
மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைதுறையை சார்ந்தவகள் பலரும் நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 7 ஆம் தேதி கிண்டியில்  2 திருநங்கைகள் உள்பட 10 இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்பொழுது அங்கு வந்த காவலர்கள் அவர்களை கைது செய்ததோடு, திருநங்கைகளிடம் தரம் குறைவாக நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து அந்த போராட்டத்தில் பங்கேற்ற திருநங்கை கிரேஸ் பானு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :