செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (17:06 IST)

6 நாட்களில் மட்டும் 1,000 மஞ்சப்பைகள் விற்பனை: சுற்றுச்சூழல் துறை செயலாளர் டுவிட்

manjapai
6 நாட்களில் மட்டும் 1,000 மஞ்சப்பைகள் விற்பனை: சுற்றுச்சூழல் துறை செயலாளர் டுவிட்
சென்னை கோயம்பேடு பகுதியில் மஞ்சப்பைகள் வைக்கும் இயந்திரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட நிலையில் ஆறு நாட்களில் 1000 மஞ்சப்பைகள்  விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தலைவர் சுப்ரியா சாகு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்காகவும் அனைவரும் மஞ்சப்பைகள் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்து வருகிறது.
 
அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பைகள் இயந்திரத்தில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் ஆயிரம் மஞ்சப்பைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன
 
இதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக சுற்றுச்சூழல் செயலாளர் அவர்கள் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்