சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (12:05 IST)

பாகுபலி 2-வை மிஞ்சிய விக்ரம்… சென்னையின் பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்

விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கமான ரோஹினி திரையரங்கில் முதல் வாரத்தில் அதிக நபர்கள் பார்த்த சாதனையில் பாகுபலி 2 வை தற்போது விக்ரம் முந்தியுள்ளது. 5 வருடமாக முறியடிக்கப் படாமல் இருந்த பாகுபலி 2 வின் இந்த சாதனையை தற்போது விக்ரம் முறியடித்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது. விக்ரம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக வெளியான தமிழ் திரைப்படங்கள் அனைத்தின் சாதனையையும் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.