செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:26 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் செல்வாக்கு உயரும்.


 


பிரபலங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். எதிர்பார்த்த பணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். ஆடியோ,  வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்.

வேற்று மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வீண் செலவு,  தூக்கமின்மை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். 
 
கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். தடைகளை உடைத்தெறிந்து சாதிக்கும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8, 17
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மயில் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்