அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அலைச்சல், டென்ஷன் குறையும்.
வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும். தர வேண்டிய பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். புது வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள்.
அவ்வப்போது வீண் டென்ஷன், கண் எரிச்சல் வந்து செல்லும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். விடாமுயற்சி தேவைப்படும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 21
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி