Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

வெள்ளி, 30 ஜூன் 2017 (20:59 IST)

Widgets Magazine

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். 


 


கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலர் புது வீட்டில் குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பாசமழைப் பொழிவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

பயணங்களால் திருப்பம் உண்டாகும். பழைய சொந்த&பந்தங்கள் தேடி வரும். வேலைக் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை அமையும். ஒரு சொத்தை தந்து மற்றொன்று வாங்குவீர்கள். சகோதர ஒற்றுமை வலுக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். 
 
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். 
 
கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். எதையும் சாதித்துக் காட்டும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 2, 11, 15, 16, 20
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை 
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், செயலில் வேகத்தை காட்டுவீர்கள். எதிர்பாராத ...

news

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2017ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ...

news

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை ...

news

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளிலிருந்து ...

Widgets Magazine Widgets Magazine