ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், செயலில் வேகத்தை காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சிலருக்கு புது பதவி, பொறுப்பு தேடி வரும். புது வேலைக் கிடைக்கும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள்.
மனைவிவழி ஆதாயம் உண்டு. மாதத்தின் மையப்பகுதி முதல் வீண் சந்தேகம், ஒய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, மனைவியுடன் மோதல்கள் வந்துப் போகும். எதிலும் ஈடுபாடற்ற நிலை, அவ்வப் போது ஒரு அச்சம், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தலைச்சுற்றல் வந்து நீங்கும்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பற்று வரவு கணிசமாக உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள்.
கலைத்துறையினர்களே! தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 1, 6
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்