திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (18:32 IST)

இனி வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்...

தேவையான பொருட்கள்:
 
பரோட்டா – 5 
முட்டை – 2 
கேரட் – 1
பச்சைமிளகாய் – 2 
வெங்காயம் – 3 
தக்காளி – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன், 
லெமன் சாறு – 1 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் 
உப்பு – தேவைக்கு ஏற்ப
 
செய்முறை:
 
1. பரோட்டாவை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 
 
2. முட்டையில் சிறிது மிளகு, பொடியாய் அறிந்த பச்சை மிளகாய், கேரட், உப்பு போட்டு கலந்து தோசை போல் ஊற்றி சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
 
3. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
 
4. நன்கு வதங்கியதும் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், உப்பு தூவி வதக்கவும்.
 
5. ஓரலவு வெந்ததும் வெட்டி வைத்துள்ள புரோட்டா, முட்டை சேர்த்து நன்றாக கரண்டியால் கொத்தியவாரு கிளறி, சிறிது லெமன் சாறு பிழிந்து இறக்கவும். 
 
இவ்வாறு செய்தால் கொத்து பரோட்டா ரெடி.