மட்டன் தொக்கு செய்ய தெரிந்து கொள்வோம்...

Sasikala|
தேவையான பொருட்கள்:
 
மட்டன் - 1/4 கிலோ 
தனியாத் தூள் - 1 மேஜைக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி
சோம்பு தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 2 மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது
 
தாளிக்க:
 
பட்டை - 1
கிராம்பு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

 
செய்முறை:
 
மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக  நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
 
பிறகு மிளகாய் தூள், தனியாத் தூள், சீரகப் தூள், சோம்பு தூள் சேர்த்து கிளறவும். அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 5 - 10 நிமிடம் நன்றாக கிளறவும். மட்டனில் இருந்து தண்ணீர் வரும். அதனால் தண்ணிர் சேர்க்க தேவை இல்லை. உப்பு சரி  பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். பிறகு குக்கரை மூடி வெயிட்  வைக்கவும். 
 
முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 20-25 நிமிடங்கள் அல்லது மட்டன் வேகும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறக்கவும். மட்டனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் தண்ணீர் வற்றும் வரை  குக்கர் மூடி போடாமல் கொதிக்க வைக்கவும். தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான  மட்டன் தொக்கு தயார்.
 


இதில் மேலும் படிக்கவும் :