வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : சனி, 30 ஜூலை 2022 (15:45 IST)

ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் 65 செய்ய !!

Andhra style Chicken 65
தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (சிறியதாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
முட்டை - 1
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

சிக்கன் துண்டுகள நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பொளலில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் பொரித்து, எடுத்து விட வேண்டும். பின் அந்த எண்ணெய்யில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 தயார்.