திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (10:22 IST)

சுவையான மீன் பஜ்ஜி எப்படி செய்வது...?

தேவையான பொருட்கள்:
 
முள் நீக்கிய மீன் - அரை கிலோ
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன் 
அரிசி மாவு - 1 ஸ்பூன் 
சோள மாவு - 2 ஸ்பூன் 
மைதா மாவு - 2 ஸ்பூன் 
எண்ணெய்  - தேவையான அளவு  
உப்பு  - தேவையான அளவு  
எலுமிச்சை பழச் சாறு  - சிறிதளவு   

செய்முறை:
 
முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி முள் நீக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு,அத்துடன்  மிளகாய்த் தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
 
சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
 
எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்துள்ள மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சுவையான மீன் பஜ்ஜி தயர்.