Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அனைவரும் விரும்பும் சுவைமிக்க இறால் பிரியாணி செய்ய வேண்டுமா...?

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
இறால் - அரை கிலோ
அரிசி - அரை கிலோ
எண்ணெய் - 150 கிராம்
நெய் - சிறிதளவு
வெங்காயம் - 3
தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
கொத்தமல்லி தழை - கால் கட்டு
புதினா - கால்கட்டு
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாவயான அளவு
கேசரி கலர் - ஒரு சிட்டிகை

 
செய்முறை:
 
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிரம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக  வதக்கி இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு கொத்தமல்லி புதினா, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும். தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை  போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து வேகவிடவும்.
 
இப்போது அரிசியை முக்கால் பாகம் வேகவிட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள இறால் கலவையில் கொட்டவேண்டும். கொட்டி தம்மில் விடவேண்டும். தம் போடுவதற்கென்றே உள்ள  தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் விடவேண்டும்.
 
சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்புகலர் பொடியை கரைத்துமேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி  போட்டு தம்மில் விட வேண்டும். 5 நிமிடம் கழித்து திறந்தால் சுவையான இறால் பிரியாணி தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா செய்ய...!

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து ...

news

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க....

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது ...

news

இஞ்சி டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்....

இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் ...

news

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா...?

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் ...

Widgets Magazine Widgets Magazine