ஈஸியான காலை உணவுக்கு இதோ இருக்கு பிரெஞ்ச் டோஸ்ட்...!
தேவையான பொருள்கள்:
பிரட் துண்டுகள் - 6
முட்டை - 1
பால் - 100 மில்லி
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
நெய் - 3 மேஜைக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும். அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல் (அல்லது) தவாவை வைத்து சூடானதும் பிரட் ஒன்றை எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு பிரட்டை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும். ஓரங்களில் மொறுகலானதும் மறு புறம் திருப்பி போடவும். இருபுறமும் மொறுகலானதும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள 5 பிரட் துண்டுகளையும் இதே முறையில் ரோஸ்ட் செய்யவும். சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.