வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலில் நீர் பற்றாக்குறையை சரிச்செய்ய உதவும் உணவுகள்...!!

கோடை காலங்களில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, மோர், தயிர் போன்றவை. இவற்றில் கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு வலிமை கொடுக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், கோடை காலத்தில் ஏற்படும் உடல் நீர் பற்றாக்குறையை சரி செய்கிறது.
 
கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், மக்னீசியம்,  பொட்டசியம், அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும்  கொடுப்பதுடன் வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
 
வெயில் காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டியவற்றில் பீச் பழங்களும் ஒன்று. இளநீர் அருந்துவதனால் வயிற்று பிரச்சனை, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உடல் வறட்சி, உடல் கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
குடைமிளகாய் அதிகப்படியான சத்துக்களை தன்னுள்கொண்டுள்ளது. குறிப்பாக  வைட்டமின் சி, கெரோடினாய்டுஸ், நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதனால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு  சக்தியை தருகிறது.
 
நார்ச்சத்து நிறைந்த உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன்.உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கிறது.
 
உயர் இரத்த அழுத்தப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாகும். நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி சாப்பிடும்போது, நோய் எதிர்ப்பு  சக்தி அதிகரிக்கும்.
 
லிச்சி பழங்களில் அதிகப்படியான நீர்ச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளது இந்த பழங்கள் கொடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும், உடலில் நீர் பற்றாக்குறையை சரிசெய்து புத்துணர்வுடன் செயல்பட உதவுகிறது.
 
வெள்ளரியில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க உதவுவதுடன், உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களையும்  கொடுக்கிறது.