1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

குங்குமப்பூவில் உள்ள சத்துக்களும் அதன் பயன்படுத்தும் முறைகளும்....!!

குங்குமப் பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருவுற்ற பெண்கள் தினமும் குங்குமப்  பூவை பாலில் கலந்து சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்  கூடாகக் காணலாம்.
 
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது  வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு  எடுத்துக்கொள்வது நல்லது.
 
குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மன அழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க, குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த  அழகை மீட்டுத்தரும்.
 
குங்குமப்பூவிற்கு அதிக வரவேற்பு உள்ளது. குங்குமப்பூவில் பல வகைகள் உள்ளது, அவற்றில் சில முக்கியமான வகைகள் பத்மகாதி, பராசிகா,  மதுகந்தி, பாதிகா, சர்கோல். சளி தொல்லை உள்ளவர்கள் குங்குமப்பூவை எடுத்துக் கொள்ளும்போது அது சளித் தொந்தரவு நிவாரணியாகச்   செயல்படும்.