சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!
உலக அளவில் மிகவும் வேகமாக பரவி வரும் நோய்களில் ஒன்று சிறுநீர் புற்றுநோய் என்று கூறப்பட்டு வருகிறது. இது ஆண்களுக்கு பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான சிகிச்சை அளிக்க அதிக செலவும் ஆகும்.
சில சந்தர்ப்பங்களில் சிகிச்சை பலனின்றி மரணமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், இந்த சிறுநீர் பை புற்றுநோய்க்கு புதிய அணுகுமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொழுப்பை குறைக்க பயன்படுத்தப்படும் வகை மருந்துகளில், ஒரு பரிசோதனை மருந்தை சேர்ப்பதன் மூலம் சிறுநீர் பை புற்றுநோயை தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் பலன் உள்ளதாக இருக்கும் என்றும், விரைவில் இந்த சிகிச்சை முறையை நோயாளிகளுக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran