செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்திப் பொருட்களும், வைட்டமின்களும் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

 
சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது. அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட,  பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
 
சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றைப்  போக்கும்.
 
சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.
 
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. 
 
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
 
சப்போட்டா பழத்தை எலுமிச்சை சாறுடன் சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப்  பளபளப்பாக வைக்கும்.
 
சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேன் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் வயிற்று வலி இவற்றைப் போக்கும்.