1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 ஜனவரி 2025 (18:55 IST)

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனை.. தீர்வு என்ன?

Skin Itching
சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் சார்ந்த பிரச்சனை அதிகம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில் இதுகுறித்து தர்போது பார்ப்போம்.
 
தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள், பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாகவும், பெரும்பாலும் பெரிபெரல் வாஸ்குலர் நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், குருதியோட்டத்தை குறைத்து, வறட்சியை உண்டாக்கி, சரும கொலோஜெனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது என்றும் கூறப்படுகிறது.
 
சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைப்பட்டு தோல் வறட்சியை ஏற்படுத்துவதால் வறண்ட சருமம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு தோல் நோயை உருவாக்கும்.
 
இதற்கு என்ன தீர்வு என்றால் சருமத்தை தினமும் ஈரப்பதத்துடன் வைத்திக்க வேண்டும்.  வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.டியோடரண்ட் சோப்புகள் மற்றும் வலுவான பாடி வாஷ்களை தவிர்ப்பது நல்லது. 
 
 முகத்தை தினமும் 2 அல்லது 3 முறை கழுவினால் போதும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

Edited by Mahendran