புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (16:39 IST)

புகார் அளிக்க வந்தவருக்கு கேக் கட்டிங் பார்ட்டி!!

மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். 


 
 
மும்பையில் உள்ள சகிநாகா காவல் நிலையத்தில் போலீஸும் பொது மக்களும் நல்ல உறவு முறையில் உள்ளனர். இந்நிலையில், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த ஒருவருக்கு போலீசார் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
 
அனிஷ் என்பவர் புகாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை எழுதி அளித்துள்ளார். அப்போது அவர் பிறந்த தேதியை கவனித்த போலீஸார் அன்று அவரது பிறந்தநாள் என்பதை உணைர்ந்துள்ளனர்.
 
உடனே, கேக்கை வரவழைத்து இளைஞரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கொண்டாடியுள்ளனர். மேலும், அந்த காவல் நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தில் அந்தப்  புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.