ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:55 IST)

ஔரங்கசீப், பாபரால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு

அவுரங்கசீப், பாபர், ராவணனால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
 
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசினார். 
 
சனாதன தர்மத்தின் மீது அவநம்பிக்கை வெளிப்படுத்துவது மனித குலத்திற்கு ஆபத்து என்றும் இந்த தர்மத்தை இழிவாக பேசுபவர்கள் தங்கள் செயல்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
 ராவணன், பாபர், அவுரங்கசீப் போன்றவர்களால் கூட சனாதர தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என்று கூறிய அவர்  அனைத்து மதங்களை சேர்ந்த மக்களுக்கும் அவர்களுக்கான தேவையின் போது அவர்களின் நம்பிக்கைகளுக்கு சனாதன தர்மம் ஆதரவாக இருந்து உள்ளது என்று தெரிவித்தார்.
 
Edited by Siva