வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (08:04 IST)

சனாதனம் பற்றி கருத்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்: விளக்கம் அளித்த கமல்ஹாசன்..!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது என்பதும் பாஜக மட்டும் இன்றி இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் உதயநிதி பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும் திரையுலகில் இருந்து அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஏற்கனவே வெற்றிமாறன், சத்யராஜ் மாரி செல்வராஜ் உள்பட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
சனாதனம் பற்றிய கருத்து சொல்ல உதயநிதி உரிமை உண்டு என்றும் அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால் வன்முறை அச்சுறுத்தல்கள் மிரட்டல் உத்திகள் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அவரது வார்த்தைகளை திரித்து கூறுவதற்கு பதிலாக சனாதனம் குறித்த விவாதத்தில் ஈடுபடுவது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva