1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:25 IST)

ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்.. மதக்கலவரத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு..!

a raja
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்பி ஆ ராசா மீது டெல்லி காவல் துறையில் வழக்கறிஞர் வினித் என்பவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  திமுக எம்பி ராசா, சனாதனம் ஒரு ஹெச்ஐவி போன்றது என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த கருத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வினித் என்பவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva