திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 டிசம்பர் 2017 (13:38 IST)

கணவனின் ரத்தத்தை குடித்து வந்த சூனியக்கார மனைவி!

சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி மனைவி ரத்தம் குடித்து வந்ததால் கணவர் மரணம் அடைந்தார்.

 
மேற்கு வங்க மாநிலம் சைரைபூர் பகுதியில் வசிக்கும் சபித்திரி என்ற பெண் சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி தினமும் ரத்தம் குடித்து வந்துள்ளார். இதனால் அவரது கணவர் மரணமடைந்துள்ளார். ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர்.
 
இத்தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி ரத்தம் குடிப்பதை ஒருவித சடங்கு போல் செய்து வந்ததாக சபித்திரியின் மாமியார் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
 
மேலும் இதுதொடர்பான விசாரணையில், சபித்திரியின் கணவர் உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டு உயிர் இழந்தது தெரியவந்துள்ளது.