Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மும்பையில் கைதான தஷ்வந்த் தப்பியோட்டம்: பெரும் பரபரப்பு

Last Modified வியாழன், 7 டிசம்பர் 2017 (22:10 IST)
சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த, பணம் நகைக்காக பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிய நிலையில் நேற்று மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்

இந்த நிலையில் இன்று தஷ்வந்த் சென்னைக்கு வரப்படுவான் என்று கூறப்பட்ட நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டதாக திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.

மும்பை பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது தஷ்வந்த் தப்பியதாகவும், மீண்டும் தஷ்வந்தை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தஷ்வந்த் தப்பியோடியுள்ளது தமிழக காவல்துறையினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :