வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (09:39 IST)

எல்லாம் தப்பிச்சு ஓடுங்க; திடீர் நிலச்சரிவில் தப்பித்த பேருந்து! – வைரலாகும் வீடியோ!

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருந்து பேருந்து ஒன்று நிமிட பொழுதில் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் நைனிதால் பகுதியில் பேருந்து ஒன்று 14 ப்யணிகளுடன் பயணித்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பேருந்து உடனே நிறுத்தப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் உடனடியாக பயணிகளை கீழே இறங்கி ஓட சொல்லிவிட்டு பேருந்தையும் ரிவர்ஸில் எடுத்தனர். ரிவர்ஸில் எடுத்த சில நிமிடங்களில் பேருந்து நின்றிருந்த இடத்தையும் நிலச்சரிவு மூடியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.