திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick

ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட கேரளா பெண்கள்! – கைது செய்தது என்.ஐ.ஏ

பிரபல தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்டதாக கேரளாவில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நாட்டை பிடித்துள்ளது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் தலீபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களின் பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பு கருதி முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை கேரளாவை சேர்ந்த இரண்டு பெண்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அந்த பெண்களை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.