பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்த கொடூரர்கள்! உ.பியில் சோக சம்பவம்!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் முன்னே கற்பழித்து அதை செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சித்ரகூட் மாவட்டத்தில் மவூ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவர் குடும்பத்தாரோடு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது குறுக்கே வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று குடும்பத்தாரை பிடித்து மரத்தில் கட்டியுள்ளனர். பிறகு அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் கற்பழிக்கப்படும்போது அந்த கூட்டத்தை சேர்ந்த ஒருவன் அதை வீடியோ எடுத்துள்ளான். அதை சமூக வலைதளங்களில் பரவ் விட்டிருக்கிறது அந்த கும்பல். அதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீஸ் அந்த ஆறு பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.