திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2019 (13:01 IST)

’காவல் அபராத கட்டண ரசீதில் ’ தமிழ் இல்லாததற்கு ...மு.க. ஸ்டாலின் ஆவேசம் !

புதுக்கோட்டை குளவ்சாய்ப்பட்டியில் உள்ள  திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் இல்ல விழாவில் கலந்துகொண்ட  திமுக. தலைவர் மு.க. ஸ்டாலின்   மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது ஸ்டாலின் கூறியதாவது :
 
1967 - ஆம் ஆண்டிற்கு முன்பு சீர் திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. திமுக முதல்முறை ஆசியமைத்த சமயத்தில் சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.
 
தமிழகத்தில் போக்குவரத்து காவல் அபராத கட்டணத்திற்கு வழங்கப்படும் ரசீதில் தமிழ் இல்லை என குற்றம் சாட்டினார். ஆங்கிலத்தில் உள்ள ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்ட நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
 
மேலும், நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் வரும் சட்டபேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெரும் என தெரிவித்தார்.
 
கடந்த 1967 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதல்வர்  தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.