புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (16:08 IST)

போலீஸார் - வழக்கறிஞர்கள் இடையே மோதல்... துப்பாக்கிச் சூடு ! மக்கள் பதற்றம் !

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் - வழக்கறிஞர்களிடையே மோதல்  ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் - வழக்கறிஞர்களிடையே திடீரென மோதல் ஒருவானது. இந்நிலையில் அங்கிருந்த மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
 
நாட்டுக்கும் நாட்டில் உள்ள மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்  பொறுப்பில் உள்ள காவலர்களும், நீதியை நிலைநாட்டும் இடத்தில் உள்ள வழக்கறிஞர்களும், நீதிமன்ற வளாகத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

அப்போது, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு தீ வைப்பட்டதாலும்,  துப்பாக்கிச் சூடும் நடந்ததாலும் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.