உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த்ம் உடல் நலக் குறைவால் காலமானார்.
உத்தரபிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் ,சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமமையில் சிகிச்சை பெற்று வந்தார் .கடந்த 15 ஆம் தேதி டெலி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து, அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. டயாசிலிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.