செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (19:49 IST)

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு காலமானார்

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அன்பரசு அவர்களின் மறைவுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
மத்திய சென்னை தொகுதியில் இருந்து கடந்த 1989 மற்றும் 1991 ஆகிய இருமுறை காங்கிரஸ் கட்சியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அன்பரசு அவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அன்பரசு அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் அன்பரசுவின் உயிர் பிரிந்தது