உபி மாநிலத்தில் எங்கும் காவி, எதிலும் காவி! எதிர்க்கட்சிகள் அதிருப்தி

UP bus" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (17:44 IST)
தமிழக அரசுக்கு நீண்ட காலமாக பச்சை நிறம் ராசியாக இருந்த நிலையில் உபி அரசில் எங்கும் காவி, எதிலும் காவி என மாறியுள்ளது.


 
 
உபி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற ஆதித்யநாத் யோகி காவி நிற உடை மட்டுமே அணிவதால் மாநிலம் முழுவதுமே காவி நிறமாக மாறி வருகிறது
 
பள்ளிக்குழந்தைகளுக்கு அரசு தரும் புத்தக பையில் இருந்து அனைத்துமே காவி நிறமாக இருக்கும் நிலையில் இன்று முதல் 50 புதிய பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பேருந்துகளுக்கும் காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதற்கான விழா அரங்கில் அலங்காரம் முதல் பேருந்துகளில் கட்டிய பலூன்கள் வரை எங்கும் எதிலும் காவிதான்
 
முதல்வர் யோகியின் காவி நிற அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும் காவி நிறத்தை அரசு கைவிடப்போவதில்லை என்றே கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :