Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுமிகளை பலாத்காரம் செய்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்

School Girls
Abimukatheesh| Last Updated: புதன், 11 அக்டோபர் 2017 (12:57 IST)
ஒடிசா மாநிலத்தில் மாவோஸ்டுகளை வேட்டையாடும் பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

 

 
ஒடிசா மாநிலத்தில் கோராபுட் மாவட்டத்தில் மாவோஸ்டுகளை வேட்டையாடும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் மீது சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள சோரிஸ் பாடர் கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் மதியம் பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
அப்போது வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மத்திய படை வீரர்கள் 4 மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளனர். மாணவிகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
 
மாணவிகள் வனப்பகுதியில் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். பின் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 மாணவிகளின் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் ஒருவர், தனது சகோதரியை மத்திய போலீஸ் படை வீரர்கள் கொடூரமாக கற்பழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஊர்மக்களும் இதே குற்ற்ச்சாட்டை கூறியுள்ளனர். 
 
இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :