செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (13:51 IST)

ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து..

ஹைதராபாத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் கச்செகுடா ரயில் நிலையத்தில் இன்று காலை 10.30 மணியளவில் எம்.எம்.டி.எஸ். ரயில் ஒன்று, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கொங்கு எக்ஸ்பிரஸின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட தவறினால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் மற்ற ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.