ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக அசாரூதின் தேர்வு !
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக முகமது அசாருதீன் தேர்வாகியுள்ளார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக 56 வயதான் அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் மெய்யப்பன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.