செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (18:37 IST)

செல்போனில் மூழ்கிய இளைஞனை முட்டித் தள்ளிய ’ காளை ’! வைரல் வீடியோ

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற பொறியியல் கல்லூரில் படிக்கும் மாணவன் ஒருவனை காளை மாடு முட்டி கீழே தள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு இளங்கலை இறுதி ஆண்டு படித்து வரும் அக்சய் என்ற மாணவர், கடந்த சனிக்கிழமை அன்று சாலையோரத்தில் நின்று செல்போனில் சேட் செய்து கொண்டிருந்தார்.
 
அப்போது அதேசாலையில் ஆக்ரோஷமாக ஒடி வந்த இரு காளைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அக்சயையும் முட்டி கீழே தள்ளியது. இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அக்சயை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
அங்கிருந்த சிசிடிவி கேமரவில் பதிவான காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.