புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (15:00 IST)

வெள்ள பாதிப்புக்கு ரூ. 2 கோடி நிதி உதவி செய்த பிரபல நடிகர் ! குவியும் பாராட்டுக்கள்

அசாம் , மும்பை உள்ளிட்ட சில வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல லட்சக்கணக்கான மக்களும்  இதனால் பெரிதும் பாதிகப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா பூங்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசும் பல்வேறு உதவிகள் செய்துவருகிறது.
 
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அகஷய் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அசாம் மாநிலமுதல்வர் நிவாரண நிதிக்காக சுமார் 1 கோடி ரூபாய் மற்றும் தற்போது வெள்ளம் பாதிக்கபட்டுள்ள காசிரங்கா பூங்காவுக்காக 1 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 2 கோடி ரூபாயை நிதியுதவி வழங்கி உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.