புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (17:36 IST)

ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கு, பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் விசித்திரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் நபருக்கு, பெண்பால் இனவிருத்திக்கான கருப்பையும், இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத்தன்மையுடன் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நபரின், அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புகள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டன. இந்த அரிதான நோயின் பெயர் ”பெர்சிஸ்டண்ட்முல்லெரியன் டக்ட் சிண்ட்ரோம்’” (Persistent Mullerin Duct Syndrome) .

இந்த சிகிச்சையை குறித்து பேசிய மருத்துவர்கள், இந்த அரிதான நோயுடன் கூடிய 200 நபர்களை பார்த்துள்ளதாகவும், அதை தொடர்ந்து இந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.