ஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - நடிகை ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்

reddy
Last Updated: திங்கள், 16 ஜூலை 2018 (14:10 IST)
தன்னை ஆண்கள் படுக்கைக்கு பயன்படுத்திய போது ஆணுறை பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீதேவி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

 
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார். 
 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். அந்த வரிசையில் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் சிக்கியுள்ளார்.

 
இந்நிலையில், உங்களுக்கு இன்னும் எய்ட்ஸ் நோய் தாக்க வில்லையா? இத்தனை பேரிடம் படுக்கையை பகிர்ந்து விட்டு இப்போது குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். நடிகையாக வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்வதை ஒரு பகுதி நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா? என அவரின் முகநூல் பக்கத்தில் ஒருவர் தரக்குறைவாக கேள்வி எழுப்பியிருந்தார்.

 
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீரெட்டி “உங்களின் அக்கறைக்கு நன்றி. ஆணுறை பற்றி உங்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். உடலுறவில் எனக்கு நல்ல அறிவு இருக்கிறது. என்னை எப்படி பாதுகாப்பது என எனக்கு தெரியும். 4 மாதங்களுக்கு ஒருமுறை என் உடலை மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறேன். என்னுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் யோகா மூலம் உறுதியை பெறுகிறேன். இது போல கருத்து தெரிவித்து  பாவத்தை பெறாதீர்கள். உங்களின் விமர்சனத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மரணம் அடைய எய்ஸ்ட் தேவையில்லை, காய்ச்சலால் கூட நீங்கள் மரணமடையலாம் என அவர் பதிலளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :