வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (08:57 IST)

அந்த ஹோட்டலில் என்னை... ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் ராகவா லாரன்ஸ்.....

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் அடுத்து நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சிக்கியுள்ளார்.

 
பிரபல தெலுங்கு நடிகர் ஞானி உட்பட பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என தெலுங்கு சினிமா உலகம் மீது பாலியல் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் லீக்ஸ் என்கிற பெயரில்,  தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார் கூற தொடங்கியுள்ளார்.
 
சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் தன்னை இயக்குனர் முருகதாஸ் பயன்படுத்தியதாக கூறி பற்ற வைத்தார். அதன் பின் ஹைதராபாத் பார்க் ஹோட்டலில் நடிகர் ஸ்ரீகாந்த் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியதாக கூறி பரபரப்பை ஏற்றினார்.
 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸின்ம் மீது அவர் பாலியல் புகாரை கூறியுள்ளார்.

 
தனது முகநூல் பக்கத்தில் “ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. 
 
என் உடலின் வயிற்றுப்பகுதியை உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை” என பதிவிட்டுள்ளார்.
 
முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.